மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக ,வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவராவ்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 20 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது .இதற்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள்.

இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள், பாட குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை tamilnaducareersservices.tn.gov.in என்ற மெய்நிகர்  கற்றல் இணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இணையத்தில் பதிவு செய்து ,அனைத்து அரசு பணி, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெறலாம்.

மேலும் கல்வி தொலைக்காட்சி வழியாக ,பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது .பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:00 முதல் 9:00 மணி வரை காணலாம். இரவு ஏழு முதல் ஒன்பது மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

அதேபோல "TN Career Services Employment" என்ற YouTube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ வட்டாரங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.