மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,419 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,419 கன அடி வீதம் வந்து கொண்டிருந்து நீரின் (நேற்று மாலை வினாடிக்கு 17,777 கன அடி). இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.72  கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயர தொடங்கியுள்ளது.