சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்கள் சாலை விபத்துக்களை தவிர்க்க சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை அகற்றி தூய்மைப்படுத்தினர் பொதுமக்கள் நெகிழ்ச்சி....
சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பணியாளர்கள் சாலை விபத்துக்களை தவிர்க்க சங்ககிரி நகர் பகுதிகளில் ஆயுத,விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை புதன்கிழமை அகற்றி தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பூஜை செய்தவர்கள், மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சாலையில் திஷ்டி பூசணிக்காய்களை உடைத்துள்ளனர். இதனையடுத்து சாலையில் கிடக்கும் பூசணிக்காய்களால் ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்க சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்கள் அவர்களாக தானாக முன் வந்து செவ்வாய், மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் சாலைகளில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை அகற்றி அப்பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர் சங்க பணியாளர்களின் சேவைகளை அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் வெகுவாக பாராட்டினர்.
சங்ககிரி செய்தியாளர்
முத்து