மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,701 கன அடி. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,961 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,701 கன அடியாக அதிகரித்து உள்ளது. இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.7 கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணை மாலை நிலவரப்படி நீர் இருப்பு 91.44 டி.எம்.சியாகவும் உள்ளது
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 76