மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,556 கன அடியாக சரிவு.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14818 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,556 கன அடியாக குறைந்தது.  மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.79 கன அடியாகவும் நீர் இருப்பு 91.55 டி.எம்.சியாகவும் உள்ளது.