மேட்டூர் காவிரியில்  துர்க்கை அம்மன் சிலை கரைக்கப்பட்டது.சேலம் பள்ளப்பட்டியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு சிவசேனா சமிதி அமைப்பு சார்பில் துர்க்கை அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா முடிந்ததையடுத்து துர்க்கை அம்மன் சிலை லாரி மூலம் மேட்டூருக்கு கொண்டுவரப்பட்டது.மேட்டூர் காவேரி பாலம் படித்துறைக்கு கொண்டுவரப்பட்ட துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் துர்க்கை அம்மன் சிலையை  பக்தர்கள் தோளில் சுமந்து காவிரி ஆற்றில் கரைத்தனர்.