மேட்டூர்-11.09.22 காலை 9.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000கனாடியாக சரிந்தது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65,000கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு வினாடிக்கு 50,000கன அடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 27,000கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47டி எம் சி யாகவும் இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000கனாடியாக சரிந்தது.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 108