மேட்டூர்-13.09.22  சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நங்கவள்ளி ஒன்றிய தலைவர் கார்த்திகா தேவி தலைமை வகித்தார்.

 

நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராசாத்தி போராட்டத்தை விளக்கி பேசினார்.நாங்க வெள்ளி பேருந்து நிலையத்திலிருந்து நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலமாக வந்த பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர்  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வாசுதேவபிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மணுவை கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.