இளம்பிள்ளை செல்வராஜ் .சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த பாட்டப்பன் நகர் பகுதியில் பாட்டப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் அருகாமையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலை வழியாக களர்பட்டி, பாறைக்கொட்டாய், கோட்டமேடு, ஈஸ்வரன் கோயில், கோட்டை முனியப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருந்து சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வழியே வந்து செல்கின்றனர். தற்போது அவ்விடத்தில் பாட்டப்பன் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த தனிநபர் பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையினை வெட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் , பீடிஓ, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று மகுடஞ்சாவடி பீடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு வழி பாதையினை மீட்டுத் தர வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மகுடஞ்சாவடி அருகே தனிநபர் சாலையை ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி ஆர்ப்பாட்டம்
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 95