சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள சிஎஸ்ஐ நகர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் பேராலயத்தில் கடந்த 11-ம் தேதி ஞாயிறு மாலை 2 - மணி முதல் 4 வரை பேராலய  உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று அதில் 14 நபர்கள் போட்டியிட்டனர், இதில் கலைச்செல்வி , ரமேஷ் என்ற இருவரும் சமமான வாக்குகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் முத்தம்பட்டி ஊராட்சி ஐந்தாவது வார்டு உறுப்பினராக உள்ள ஜான்சி பரிமாலா என்ற பெண்ணிற்கு மண்டை உடைந்து  பலத்த காயம் ஏற்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் காயம் அடைந்த பகுதியில் 6 தையல் போட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அந்த பெண் வாழப்பாடி காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா மேற்பபார்வையில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் (வயது 42) என்ற லாரி டிரைவரை கைது செய்துள்ளனர், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.