சங்ககிரி விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில்
வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு.

சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயல் அலுவலர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மேலாளர்  மற்றும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் இரவிசங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக சங்ககிரி ஆர்டிஓ சௌமியா கலந்துகொண்டு
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு குறும் படத்தை வெளியிட்டு அவர் பேசுகையில், வாக்களிப்பது மக்களின் அடிப்படைக் கடமை மற்றும் உரிமை என்றும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப்பதிவு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்களை இளம் வாக்காளர்கள் குறிப்பாக மாணவர் சமுதாயம் பின்பற்ற வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப் பதிவிற்கு மாணவ சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணை வழிகாட்டுதலின் படி ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் அனைவரும் இணைக்க வேண்டும் என்றும், தாங்கள் செல்போன் மூலமாகவே இவற்றை எளிதில் செய்து கொள்ளலாம் என்றும், தேர்தல் ஆணையம் மூலமாக இதுபற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் செய்து வருகிறது. இதனை தமிழகத்தில் 100 சதம் வாக்குப் பதிவை சாத்தியமாக்குவது இளம் வாக்காளர்களின் கடமை ஆகும் என்று குறிப்பிட்டார்.


மேலும், இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மேலாளர் மற்றும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் இரவிசங்கர் மற்றும் சேர்க்கை  அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த விழாவில் தேர்தல் துணை தாசில்தார் சிவராஜ், சங்ககிரி அம்மாணி விஏஓ சங்கரஹரன், அக்கரஹாரம் விஏஓ சக்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு ஒவ்வொரு மாணவிக்கும் செல்போன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வழிமுறைகளை செய்முறை பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியைச் சார்ந்த 2,000 மாணவிகள் மற்றும் 200 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SELVARAJ, REPORTER, ELAMPILLAI