இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.ஆ. ராமச்சந்திரன் ,அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .உடன் அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் திருமதி .செ. உமாராணி, அம்மாபேட்டை மண்டல குழுத்தலைவர் திரு.தா. தனசேகர், கல்வி குழுத்தலைவர் திரு.ஆர்.பி முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.