16.09.22 - மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக சரிவு. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு சற்று தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000கன அடியிலிருந்து வினாடிக்கு 40,000கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,000 கன அடியாக குறைக்கப்பட்டது. சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக சரிவு.
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 62