வாழப்பாடி அருகே இரண்டாவது முறையாக கான்ஸ் குட்கா 36 மூட்டைகள் பதுக்கி விற்பனை செய்த நபரை மடக்கி பிடித்து கைது செய்து ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில் உள்ள பழனியாபுரம் புதுக்காலணி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 36 மூட்டைகள் 750 கிலோ எடை கொண்ட
ரூபாய் 4,10,000 மதிப்புள்ள கான்ஸ் குட்கா வாழப்பாடி போலீஸாரால் பிடிக்கப்பட்டு, பிடிபட்ட நபரிடம் ரொக்கம் ரூ 1,07,000 யும் பறிமுதல் செய்தனர், இதனை பதுக்கி வைத்த புதுப்பாளையம் மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்த மருதயன் மகன் சிவபாலன்(32) என்பவரை கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதம் முன்பு சிங்கிபுரத்தில் 2,50,000 மதிப்புள்ள குட்கா இதே கும்பலால் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்து வாழப்பாடி போலீஸாரால் கைது செய்து பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது