திருத்துறைபூண்டி சட்டமன்ற உறுபினராக இருக்கும் இந்திய கம்யுனிஸ்ட்கட்சியை சேர்ந்த  திரு. மாரிமுத்து அவர்கள் தனது தொகுதி  பிரசினைகளை எடுத்து கூறுவதற்காக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர்  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருவரிடமும் தங்கள் தொகுதி நிலவரம் மற்றும் பிரசினைகளை பேச சென்றவரை ஒரு நிமிடம் கூட உக்கார வைக்காமல் அமைச்சர்களும் எழுந்து கோரிக்கை மனுவை வாங்காமல் அவர்களின் இருப்பிட சேரில் அமர்ந்து கொண்டே கோரிக்கை மனுவை வாங்கியது அமைச்சர் என்ற அதிகார திமிர் காரணம் என்றே பொதுமக்கள் இப்போதே பேச ஆரம்பித்து இருகின்றனர்.

பொதுவாக யார் மனு கொடுத்தாலும் அமைச்சர் என்பவர் எழுந்து நின்று மனுவை வாங்கி அதை சரி செய்து கொடுகின்றேன் என்று சொல்லி அனுப்புவார்கள். இது பலமுறை அமைச்சர்களாக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் & அமைச்சர் எ.வ.வேலு  ஆகிய இருவருக்கும் இந்த நடைமுறை தெரிந்தாலும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரை சரியா மரியாதையை கொடுக்க விரும்பவில்லை என்று திருத்துறைபூண்டி மக்கள் பேசிகொள்கின்றனர்.

இனிமேல் இது போன்று நடக்காமல் இருக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ளுவாரா என்று பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.