கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று அணுமின்சக்தி உற்பத்தி அழகு  ஐந்து மற்றும் ஆறு மேடை அமைக்கும் பணிகள் ஆரம்பம் என்று கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் அறிவித்துள்ளது.

இதில் வேடிக்கை என்ன என்றால் தன்னை நல்லவராக அணுமின்சக்தி போராளி என்று தன்னை தானே அழைத்து கொல்லும் இந்த உதயகுமார் கல்பாக்கம் அணுமின்சக்தி நிலையம் பற்றி இதுவரையில் வாய் பேசியது இல்லை என்பது தான்.. கல்பாக்கம் அணுமின் நிலையம் காங்கிரஸ் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்.

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 1971 லும், சென்னை அணுமின் நிலையம் 1970 லும் அமைக்கப்பட்டது. இதிலுள்ள இரு அணு மின் நிலையங்களும் 1984 மற்றும் 1986 ஆண்டுகளில் தலா 220 மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் இயங்க துவங்கியது. இதில் தொடங்கிய நாள் முதல் இன்று வரையில் ஒரு நாள் கூட இந்த உதயகுமார் வாய் தவறி கூட பேசியது இல்லை என்பது தான் உண்மை.

தான் வசிக்கும் ஏரியாவில் தன்னை பிரபலம் என்று காட்டிக்கொள்ள இப்படி போலியாக போராளி வேடம் போட்டுகொண்டு செயல்படுகின்றார் என்று மக்கள் அவரை குற்றம் சாட்டுகின்றனர். ஒருவர் உண்மையான போராளி என்றால் தமிழகத்தில் இருக்கும் எல்லா அணுமின்சக்தி நிலையங்களையும் எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டும். ஆனால் இந்ந்த உதயகுமார் தன்னோட வீட்டின் அருகில் இருக்கும் கூடங்குளம் மட்டும் எதிர்ப்பேன் என்று தன்னை பிரபலம் என்று காட்டிக்கொள்ள இதுபோன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.

 

மேலும் தன்னை அரசியலில் பெரிய ஆள் ஆகவேண்டும் என்று தனியாக ஒரு கட்சியை ஆரமித்தார், அதில் கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டு  டெபாசிட் இல்லாமல் தோல்வியும் அடைந்தார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆதரவு என்று நிலைபாட்டை கொன்று திமுக ஆதரவு கொடுத்தார். இப்போது திமுக ஆட்சியில் மின் மிகை மின்சாரம் என்ற பெயரை பெறவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கனவில் மண்ணை போடும் விதமாக இந்த போலி அணுமின் நிலைய போராளி நடந்து கொண்டு இருக்கின்றார்.

இவரை போன்ற சுயலாபம் கொண்ட போலி போராளிகளை அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் புது மின் அலகுகள் முடியும்வரை இவரை அரசு காவலில் வைக்க வேண்டும் என்று இவரது ஊர் மக்களே பேசுகின்றனர். நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ? மின் மிகை மாநிலம் ஆகுமா தமிழக அரசு என்று பொருந்து இருந்து பார்த்தால்தான் தெரியும்.