மேட்டூர்-18.09.22
ஜலகண்டபுரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா ஆயிரம் குடும்பங்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்தநாளை இம்மாதம் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை சேவா தினமாக பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இன்று சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா சேவா தினமாக கொண்டாடப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமை வகித்தார் மாவட்ட பொதுச்செயலாளர் அரிராமன் முன்னிலை வகித்தார் நங்கவள்ள ஒன்றிய தலைவர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆயிரம் குடும்பத்தினருக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்:.
அவர் பேசும்போது கூறியதாவது: இந்தியா முழுவதும் பாஜக நாட்டு மக்களின் நல்வாழ்வு திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்திய பேரரசு நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டங்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்கின்றோம். சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
நகரங்கள் கிராமங்கள் என்று வேறுபாடு இல்லாமல் வீட்டு ரசீது உள்ள அனைத்து வீடுகளுக்கும் அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க ஜல்சக்தி திட்ட மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கப்படுகிறது. மத்திய அரசுநாட்டு மக்களுக்காக 17 திட்டங்களை அளிக்கிறது. இந்தத் திட்டங்களை யார் வழங்குகிறார்கள் என்று மக்களுக்கு தெரியவில்லை. குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புவழங்கப்படுகிறது. இதற்கான செலவு தொகையை மாநில அரசோ நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நிர்வாகங்களோ ஒரு பைசா கூட வழங்குவதில்லை. மத்திய அரசு 100% நிதியையும் வழங்குகிறது. ஆனால் அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களிடம் பல்வேறு காரணங்களை கூறி ஆயிரம் இரண்டாயிரம் என பணத்தை பறிக்கின்றனர். இந்தத் தொகையில் ஊராட்சி எழுத்தர் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.
இதற்கு தவறான நிர்வாகமே காரணம். கொடுக்கின்ற மகராசன் கொடுக்கின்றார் திருடறவன் மக்களிடமிருந்து திருடுகின்றான் மத்திய அரசின் திட்டங்களில் எல்லாம் ஆளும் கட்சியின் தலைவரும் அவரது குடும்பத்தாரும் அவ குடும்பத்தோடு தொடர்பில் இருப்பவர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
மின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தக் கூறியதாக தமிழக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு எப்போது மின் கட்டணத்தை உயர்த்தக் கூறியது. அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
மின் கட்டண உயர்வை தமிழக மக்களே விரும்பவில்லை ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்ட எந்த ஒரு குடும்பத்தினரும் மின்கட்டணம் உயர்வை ஏற்கவில்லை.
தமிழக அரசு செய்யும் தவறுக்காக மத்திய அரசை கைகாட்டுகிறார்கள்
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஆர் ராசா இந்து கடவுளை வழிபடுகிறவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் இதற்கு 2024 சட்டமன்ற தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும். இனி இவர்கள் கூறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நிச்சயம் பதிலடி தருவோம் என்றார்.