முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் பகுதியில் இந்து முன்னணியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்து முன்னணி சேலம் கோட்ட தலைமை சந்தோஷ் குமார் தலைமை வைத்தார்.

நிர்வாகிகள் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.

இதில் திரளான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை முழங்கினர்.