18.09.22
சேலம் மீன் மார்க்கெட் ,
கறிக்கடைகள் வெறிச்சோடியது.
புரட்டாசி மாதம் பிறந்ததை ஒட்டி சேலத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் கறி கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புரட்டாசி மாதம் இன்று பிறந்தது இதனையடுத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது .
புரட்டாசி மாதத்தில் பலர் மீன் மற்றும் கறி வகைகளை உண்ணாமல் விரதம் இருப்பார்கள்.
புரட்டாசி மாதம் பிறந்ததால் சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட் பகுதி இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு சிலரே வந்து மீன் வகைகளை வாங்கிச் சென்றனர்.
இதுபோல சூரமங்கலம்,ஐந்து ரோடு,அம்மாப்பேட்டை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கறிக்கடை மற்றும் மீன் மார்க்கெட்டுகளிலும் இன்று கூட்டம் காணப்படவில்லை.