மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக சரிவு. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடியாக சரிந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு. .
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 53