ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக மணல் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார் என்பது புராண தகவல். ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராமேசுவரம் வந்து அங்குள்ள ஒரு தனியார் மடத்தில் ஒ௫ மணி நேரம் சிறப்பு ஹோமம் செய்தார். அங்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்