முதியவர் அடித்து கொலை இரண்டு மகன்கள் மருமகள் மீது வழக்கு பதிவு.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆடையூர் கிராமம் குடியானூறை சேர்ந்தவர் ஸ்ரீ ரங்கம் (64) இவருக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை இவரது இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகன்கள் சரவணன்(35) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ராஜ்குமார்(31) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மருமகள் யமுனாதேவி(25) இவர்கள் மூவரும் இன்று காலை ஸ்ரீரங்கனை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றனர்.
இவர்கள் மூவரையும் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஸ்ரீரங்கன் கொடுவாளை எடுத்துக்கொண்டு எதற்காக இங்கு வந்தீர்கள் என ஆவேசமாக பேசி உள்ளார். இவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீரங்கனை மூவரும் தாக்கி கீழே தள்ளினார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீரங்கன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜலகண்டபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் சரவணன் யமுனா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.