ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பாதுஷா சுல்தான் செய்யது இப்ராஹிம் தர்காவில் மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜான் பார்லா வழிபாடு செய்தார். பின்னர் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் கமிட்டி நிர்வாகிகளுடன் இணை அமைச்சர் பேசிய போது, தர்கா கமிட்டியினர்,ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி தர்காவில் 25000 சதுர அடியில் மன நோயாளிகளுக்கு பாதுகாப்பு காப்பகம் கட்டுவதற்கும் காட்டுப்பள்ளி தர்கா சுற்றுச்சுவர் கட்டித் தருவதற்கும் கோரிக்கை வைத்தனர். இக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக மத்திய இணை அமைச்சர் ஹக்தார் கமிட்டியிடம் உறுதி அளித்தார்.உடன் பா.ஜ. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், வேலூர் இப்ராஹிம், பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்