ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பெர்லா தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார்.

ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்