சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி:
மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் கூறுகையில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்கள் 12,525 பேர் தற்பொழுது மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு நாளைக்கு சராசரியான பார்த்தோம் என்றால் 20 பணிகள் முப்பது பணிகள் உடனே செய்ய வேண்டும் மிக அவசரம் எந்த அறிக்கையை கேட்டாலும் மிக அவசரம் பலர் பணியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் பலர் விபத்தில் சிக்குகிறார்கள் பலர் வந்து இது வேலையே வேணாம்னு ஓடற அளவுக்கு நிலைமை இருக்கிறது,
பலர் உயிரை மாய்த்துக்கொண்டு கருணை அடிப்படையில் மாவட்ட தோறும் 10 பேர் 15 பேருக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக ஊராட்சி செயல்கள் கொடுக்கக்கூடிய இந்த பணி அழுத்தத்தை முன்னுரிமை அடிப்படையில் நீங்கள் முன்னுரிமைப்படுத்தி கொடுங்கள் கிராம ஊராட்சி செயலர்கள் ஊதியம் வழங்குவதை ஊராட்சி மன்ற தலைவர்கள் பல இடங்களில் தாமதித்து வருகிறார்கள் எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் நான் இன்கிரிமென்ட் போடுற அலுவலர் எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்,
கிட்டதட்ட 1000திற்கும்மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது, அரசு பணியாளர்கள் தேர்வாணயம் மூலம் நிரப்பபிடவேண்டும் என்று கேட்டு இன்று முதல் புதன்கிழமை வரை மாநிலம் முழுவதும் 10000 த்திற்கும்
ஊராட்சி செயலாளர்கள் ஊதியம் இல்லா விடுப்பில் இருக்கின்றோம்,தமிழக அரசு உடனடியாக எங்களுடைய கோரிக்கையை கனிவுடன் ஏற்று அழைத்து பேசி உடனடியாக அரசாணைகளை பிறப்பிக்க வேண்டும் எங்களுக்கு அரசாணை பிறப்பிக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்த கட்ட போராட்ட களத்தை நோக்கி செல்வோம் அதன்படி அக்டோபர் 3 முதல் தொடர் சாகும் வரை உண்ணாவிரதத்தை சென்னையில் தொடங்குவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உடன் மாநில பொருளாளர் மகேஸ்வரன்,
நாமக்கல் மாவட்ட தலைவர் R.செந்தில்குமார்,
மாநில துணை செயலாளர் மணிவேல்,
வாழப்பாடி ஒன்றிய*செயலாளர்
குமரேசன்
,நாமகிரிபேட்டை ஒன்றிய பொருளார் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.