சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய கல்வராயன் மலை பகுதியை சேர்ந்த  உமாமகேஸ்வரி என்ற பெண் கமல் என்ற பெயரில் மெடிக்கல் வைத்து நடத்தி வந்ததார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சேம்பூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு சட்ட விரோதமாக எவ்வித அனுமதியும் இல்லாமல் கருக்கலைப்பு செய்துள்ளார், அந்த பெண் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை செய்து கிடைத்த தகவலின் அடிப்படையில்  போலீசார் உடனடியாக அந்த  சம்பவ இடத்திற்கு  சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மெடிக்கலை சீல் வைத்துள்ளனர். இது குறித்து கரிய கோயில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,இதனை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதிகளில் இதேபோன்று  நிறைய போலி மருத்துவர்களும், போலி மெடிக்கல் உள்ளதாகவும் இதுபோன்று செயல்பாடுகளும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.