மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவிகள் வாந்தி மயக்கம். சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 670 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நிலையில் இன்று 274 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வகுப்பறைக்கு சென்று அமர்ந்தனர். அப்போது சிறிது நேரத்திலேயே மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மயக்கம் அடைந்த மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். சோர்வடைந்து காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவிகள் வாந்தி மயக்கம்
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 53