மேட்டூர் காவிரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்து காவிரியில் வீசப்பட்ட சிறுவன் சடலமா? போலீசார் விசாரணை.  இன்று காலை மேட்டூரை அடுத்த காவேரிகிராசில் காவிரியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் போலீசார் அழுகிய நிலையில் உள்ள சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  அழுகிய நிலையில் ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த மாதம் 27ஆம் தேதி கோவிந்தபாடியை சேர்ந்த பெயிண்டர் செந்தில் என்பவரின் மகன் பொக்கிஷை வாய் தகராறு காரணமாக அடித்து கொலை செய்த  கும்பல் சடலத்தை மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாயில் வீசி சென்றது. அப்போது உபரி நீர் கால்வாயில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் சென்றதால் சடலம் கிடைக்கவில்லை.   இந்த கொலை தொடர்பாக நால்வரை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   சிறுவனின் சடலம் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ள சடலம் கொலை செய்யப்பட்ட சிறுவன் பொக்கிஷ் சடலமா என்ற கோணத்தில் மேட்டூர் போலீசார் விசாரணையை நடத்திவருகின்றனர் .