தேசிய வளிமண்டல ஆராய்ச்சி  ஆய்வகத்தில் இளநிலை ஆய்வாளர் பணிகளுக்கு 16 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இயற்பியல் ,அணுக்கோள அறிவியல், விண்வெளி இயற்பியல், வானிலையியல் , பயன்பாட்டு வேதியியல் , புவிஇயற்பியல்  , புவி அமைப்பு அறிவியல் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பத்துடன் NET/GATE/JAM/JEE போன்ற ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் வரும் 3 /10/ 22 ஆம் தேதி www.narl.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.

டெஹராடூனிலுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: அசிஸ்டென்ட் லீ ஜியல் அட்வைசர்.(ASSITANT LEGIAL ADVISOR)

காலியிடங்கள்: 14 (யூஆர்- 6, ஓபிசி -3, எஸ்சி-3, இடபிள்யுஎஸ் -2)

சம்பளம்: ரூ. 60,000-1,80,000 

வயது :30க்குள் இருக்க வேண்டும்.எஸ்சி/ எஸ்டி -5 வருடங்கள்,ஓபிசி -3 வருடங்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்கள் சலுகை வழங்கப்படுகிறது.


கல்வித் தகுதி: சட்ட பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் .மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் CLAT 2022 தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தொகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : பொது ஓபிசி / இடபிள்யுஎஸ்- பிரிவினர்களுக்கு ரூ.300, எஸ்சி/எஸ்டி /பி டபிள்யுடி  பிரிவினர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை www.ongcindia.com என்ற வெப்சைட் மூலம் ஆன்லைன் முறையில் 3/10/2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வசந்தம் காலனியில் புதியதாக அரசு மதுபான கடை திறப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .... காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை....

சங்ககிரி அருகேயுள்ள ஒலக்கசின்னானூர் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு சங்ககிரியிலிருந்து ஈரோடு குமாரபாளையம் செல்லும் முக்கிய பிரதான சாலை சந்திப்பிலுள்ள வசந்தம்காலனி பகுதியில் மாற்றி அமைப்பதற்காக அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று அரசு மதுபான கடை திறப்பதாக தகவல் பரவியதையெடுத்து அதிர்ச்சியடைந்த வசந்தம்கலானி பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்கப்படவுள்ள அரசு மதுபான கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் இப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும் புதிதாக மதுபான கடை திறக்கப்பட உள்ள இடம் பேருந்து நிறுத்தம் மற்றும் கோவில்களும் விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மணி மண்டபம் பல்வேறு புனிதமான இடங்கள் உள்ளதாகவும் இதுவரை பெண்கள் பாதுகாப்பாகவும் எந்நேரமும் இந்த சாலையில் சென்று வருவதாகவும் இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் எனவே இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கக் கூடாது எனவும் இந்த தடையும் மீறி அரசு திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட எந்த போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறினர். மேலும் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது பெண்களுக்கு துணையாக ஆண்களும் அங்கு திரண்டு கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் கலால் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் மதுபான கடை திறக்க விடமாட்டோம் என உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி செய்தியாளர்
முத்து