- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 137
மீத்தேன் ,எட்டு வழி சாலை,CAA குடியுரிமை சட்ட போராட்டம் , அறவழியில் போராட்டம் செய்த தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யபாடுவதாக இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டு தன்னோட கழக தொண்டர்கள் அற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கின்றார்.
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 184
கடந்த சட்டசபை கூட்ட தொடரில் சட்டமன்ற உறுபினராக இருக்கும் கொங்கு நாடு தேசிய கட்சியின் பொது செயலாளராக இருக்கும் ஈஸ்வரன் பேசிய பேச்சால் மக்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் , நாட்டு பற்று கொண்டவர்கள் , மற்றும் தியாகிகளின் சொந்தங்கள் ஈஸ்வரன் மீது கடும் கோபத்தில் இருகின்றார்கள்.
ஈஸ்வரன் சட்டசபையில் பேசியது: கடந்த கவர்னர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த கவர்னர் உரையிலே, அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அதாவது இந்த ஈஸ்வரன் மனதில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை பிடிக்காத வார்த்தை என்பதை அழுத்தமாக சட்டசபையில் பதிவு செய்கின்றார். இந்த ஈஸ்வரனுக்கு தேசபக்தி என்றால் என்ன என்றே தெரியாமல் பேசி இருக்கின்றார். அதற்கு திராவிட ஆட்களும் முட்டு கொடுத்து வருகின்றார்கள்.
சரி யார் இந்த ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியது ? அதை முன்னாள் முதல்வர் கருணாநிதி வாயால் பேசியதை கீழே பார்ப்போம்: செண்பகராமன் என்பது, தனித்துச் சொல்லப்பட்ட பெயரல்ல; ஜெய்ஹிந்த் செண்பகராமன்என்று தான் அவரை அழைத்தனர். 1907ம் ஆண்டிலேயே அவர் இந்த முழக்கத்தை செய்தவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், ஐ.என்.ஏ., படை இந்த முழக்கத்தை பின்னால் செய்தது என்றாலும் கூட, இந்த முழக்கத்தை துவங்கி வைத்தவர், செண்பகராமன். வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.கடந்த 1907ல், நாமெல்லாம் பிறக்காததற்கு முன்பே, செண்பகராமன் ஒரு பெரிய குடும்பத்திலே பிறந்தவர்; கற்றுணர்ந்தவர்.
அயல்நாட்டு பிரமுகர்களான லெனினுடன், ரஷ்ய, ஜெர்மானிய தலைவர்களுடன் பழகியவர். ஹிட்லருடன் இவர் நட்பு பாராட்டி வாழ்ந்த காலத்தில், பேச்சு வாக்கில் ஹிட்லர், இந்தியர்களை பற்றி இழிவாக பேசி விட்டார். அதற்காக அவர் செண்பகராமனிடத்தில் மன்னிப்பு கேட்டார்.அப்படிப்பட்ட வீரம் செறிந்த செண்பகராமன், திருவனந்தபுரத்தில் தோன்றி, தமிழகத்தில் வாழ்ந்து, சென்னை கோட்டை வரை, ‘எம்டன்’ கப்பலில் வந்து, குண்டு போட்டு இன்றும், எம்டன் பேசப்படும் அளவிற்கு பெரும் காரியத்தில் ஈடுபட்டார்.அவரை, இதற்கு மேல் வாழவிடக் கூடாது என்பதற்காக, ஜெர்மானியர்கள், அவருடைய உணவில் மெல்ல கொல்லும் விஷத்தைக் கலந்து, அதன் காரணமாக அவர் உயிர் விட்டார் என்ற, வரலாற்று குறிப்பும் உள்ளது. இந்த சிலையின் வாயிலாக, அவர் எவ்வளவு கம்பீர மானவர், வீரத்தன்மை வாய்ந்தவர், நெஞ்சழுத்தம்கொண்டவர் என்பது, விளங்குகிறது என்று கலைஞர் கருணாநிதி பேசி இருக்கின்றார்.
இந்த ஜெய் ஹிந்த் செண்பகராமன் என்ற தியாகிக்கு அடையார் கிண்டி காந்தி மண்டபத்தில் சிலை மற்றும் மணி மண்டபம் அமைத்து இருக்கின்றார். இந்த வரலாறு தெரியாமல் அவையில் புதியதாக பதவி ஏற்ற சபாநாயகர் அப்பாவு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக சட்டசபையில் இருந்தது வேதனையான விஷயம்.
சரி இவர்கள் தான் இப்படி என்றால் இதவிட மோசமாக காங்கிரஸ்காரர்கள் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் வேடிக்கை பார்த்தனர் எனது கொடுமை.
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 201
டெல்டா பாசனம் வசதிக்காக ஒரு ஒரு ஆண்டும் காவிரி நீரை திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல் ஜூன் 12 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து அது டெல்டாவில் விவசாயம் செய்ய நீர் சென்று கொண்டு இருக்கிறது. இதில் எப்போதும் போல் கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து அதிகமாக இருந்து நீர் திறப்பு நடந்தால் அனைவருக்கும் நல்லதுதான்.
முதல்வர் மேட்டூர்அணை நீர் திறப்பின்போது அணையின் நீர் மட்டம் 95.9 அடியாக இருந்ததது. இப்போது சரியாக பதினெட்டு நாள் முடிவில் அணையின் இன்றையதினம் நீர் மட்டம் 85.31 அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு வினாடிக்கு 5130 கன அடியாக இருந்து வருகின்றது.
ஆனால் அணையில் இருந்து இவர்கள் டெல்டாவில் பாசனம் செய்ய விடும் நீரின் அளவு மூன்று மடங்கு அதிகமாக 15000 கன அடியாக இருக்கிறது. இதனால் நீரின் அளவு விரைவாக குறைந்துள்ளது . எப்போதும் இந்த தென்மேற்கு பருவ மழை காலங்களில் கர்நாடகாவில் இருந்து மழைநீர் அதிகமா வரும். ஆனால் இந்த ஆண்டு மிக மிக குறைவாகவே மழை அளவு கர்நாடகாவில் இருப்பதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் குறைவாகவே இருக்கிறது. இப்படியே சென்றால் அடுத்த வருடம் வரை மேட்டூர்அணை நீர் இருப்பு மிக மிக குறைவாக இருக்கும்.
இதனால் சேலம்,தருமபுரி , நாமக்கல்,திருச்சி கரூர் போன்ற மக்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு கர்நாடகாவில் இருந்து நமக்கு வருடா வருடம் வர வேண்டிய நீரை கேட்டு பெறுமா இந்த திமுக அரசு என்று சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பேசிகொள்கின்றனர். ஏற்கனவே திமுக ஆட்சியில் மேட்டூர்அணை நான்கு முறை நீர் வரத்து இல்லாமல் இருந்த வரலாறும் உண்டு என்று சொல்லி திமுக ஆட்சி செண்டிமெண்ட்கள் பற்றி பேசிகொள்கின்றனர்.
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 169
அஸ்தமனம் ஆகும் அமமுக ; தட்டி தூக்கிய முன்னாள் முதல்வர் எடப்பாடி.
தினமும் அதிமுக தொண்டர்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம்பேசி அவர்களை அதிமுக கட்சியை விட்டு காலி செய்து வந்த சசிகலாவின் சென்னை கூடாரத்தை காலி செய்து அதிர்ச்சி வைத்தியம் கூடுது இருக்கின்றார் முன்னாள் முதல்வர்.
அதிமுகாவில் இருக்கும் சசிகலாவின் ஆதரவு ஆட்களை தினமும் சசிகலா அலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டு வருவகின்றார். அது மட்டும் இல்லாமல் கட்சியை நான் வந்து சரி செய்கின்றேன் என்றும் தினமும் யாருக்காவது போனை போட்டு அதை பதிவு செய்து அதை தொலைகாட்சியில் போட்டு அதிமுக கட்சியை பிடிப்பேன் என்று தமாஷ் காட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூண்டோடு தூக்கும் வியூகம் கண்டு இப்போது வெளியில் காட்டிகொள்ளாமல் மனதளவில் கடும் கோபத்தில் இருக்கின்றார் என்றே கூறுகின்றார்கள்.
சேலத்தில் நேற்று அமமுக சென்னை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அமமுக சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுபினருமான பொன்.ராஜா, வடசென்னை அமமுக மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் , மத்திய சென்னை அமமுக மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் நேற்று சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தார்கள். மேலும் சசிகாலாவின் நடவடிக்கையால் அமமுக கட்சி நிர்வாகி ஆட்கள் அனைவருமே சீக்கிரம் அந்த கட்சியில் இருந்து விலகி விடுவார்கள் என்று அவர்கள் நேற்று கூறினார்கள்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி , தேனி தங்க தமிழ்செல்வன், புகழேந்தி போன்ற ஆட்கள் எல்லாம் அங்கெ பிழைக்க முடியாது என்று திமுகாவில் சிலர் சேர்ந்து விட்டனர். அதில் செந்தில் பாலாஜியின் வேகம்தான் சிலருக்கு பிரமிப்பை கொடுத்து இருக்கு. அதனால் இருக்கும் அமமுக ஆட்கள் தங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகும் முன்னாடி ஏதாவது ஒரு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படலாம் என்று அதிமுக நோக்கி படை எடுத்து வருகின்றார்கள். இங்கே நான்கு ஆண்டுகள் வேலை செய்தால் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டு வருகின்றார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் கூறினார்கள்.
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு செய்த சத்தியம் என்ன ஆகும் என்றே டிடிவி தினகரன் தொண்டர்கள் நினைகின்றார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தினகரன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கட்சியை சசிகலா வளர்க்காமல் அதிமுக கட்சியை பிடிப்பேன் என்று நாளொரு ஆடியோ வெளியிட்டு வருவது அவர்கள் கட்சி ஆட்களுக்கே பிடிக்கவில்லை என்று நேற்று அதிமுகாவில் இணைந்த அமமுக ஆட்கள் தெரிவித்தனர்.