மத்திய அரசு துறைகளில் பல்வேறு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரத்திலான பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க குரூப் பி மற்றும் குரூப் சி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை எஸ் எஸ் சி வெளியிட்டுள்ளது .

கல்வித்தகுதி:புள்ளியியல் மற்றும் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் 

விண்ணப்பிக்க கடைசி தேதி :08/10/2022

தேர்வு நாள் :டிசம்பர் 2022

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

 

 

 

 

 

தகுதி: SSLC & +2

வயது வரம்பு :(SC/ST------->18 to 37 yrs, BC/MBC/BC(Muslim)----->34 yrs)

விண்ணப்பிக்க கடைசி நாள் :14/10/2022

தேர்வு நாள் :28/01/2023

காலிப்பணியிடங்கள் :இளநிலை ஆய்வாளர்:14   பண்டக காப்பாளர்:1

இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் அக்.14 ஆம் தேதி வரை tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் 2022 ஆகஸ்டு வரை 233 வாகன விபத்துக்கள் மூலம் 249 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 98 இருசக்கர வாகன விபத்துகளில் 101 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 99 சதவீதம் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் . இனி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.இதுபோன்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் நிலை அவர்களோடு முடிவதில்லை. அவர்க ளுக்கு பின்னால் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்லலாம். எனவே அரசின் விதி முறைகளை கடைபிடித்து 4 சக்கர வாகன ஓட்டுபவர்கள் உரிய வேகத்தில் செல்வதும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் செல்வதும், சாலையை கடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்க ளில் மட்டுமே சாலையை கடப்பது என சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமேசு வரத்திற்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. சொற்பொழிவு ஏற்பாடு களை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அக்டோபர் 1 முதல் 5-ந் தேதி வரை ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டது. எனவே மேற்கண்ட நாட்களில் வெளியூர் பக்தர்களுக்கு அறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம் 

பொதுவாக அழகுக்கு பின்னால் ஆபத்து இருக்கும் என்பார்கள். அந்த நிலைமை தான் பாம்பன் ரோடு பாலமும். பகலில் பாம்பன் ரோடு பாலத்தை பார்த்தால் அது மிகவும் அழகாக இருக்கும். இருபுறமும் கடல். அதன் மேல் நீண்ட தூரம் சாலை மேம்பாலம். கடலுக்கு இடையே ரெயில்வே மேம்பாலம். ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலை மேம்பாலத்தில் நின்று தான் பாம்பன் கடல் அழகை ரசிப்பார்கள். கடலுக்கு நடுவில் ஊர்ந்து வரும் ரயிலின் அழகையும், பாலத்தை கடந்து செல்லும் கப்பலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பாம்பன் ரோடு பாலத்தின் மீது நின்று தான் பார்த்து ரசிப்பார்கள். ராமேசுவரம் என்றாலே பாம்பன் ரோடு மேம்பாலம் ஒரு தனி இடம் பிடித்து விட்டதே என்று சொல்லலாம். இது பகலில் பார்ப்பதற்கு அழகாக காட்சி தருகிறது. அதே நேரத்தில். இரவில் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான பாலமாக விளங்குகிறது. அதுக்கு காரணம் பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் உள்ள நுழைவு பகுதியில் இருக்கும் மின்விளக்குகள் எரியாதது தான். இதனால் பாம்பன் ரோடு மேம்பாலமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வழக்கமாக இரவு நேரத்தில் ராமேசுவரத்துக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு பாம்பன் ரோடு மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியும். ஆனால் புதிதாக ராமேசுவரத்துக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாம்பன் ரோடு மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பது ெதரிவதில்லை. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேகமாக வரும் கார், ஜீப், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு பாம்பன் ரோடு  மேம்பாலத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக அதை கடக்கும் போது அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். பாம்பன் ரோடு மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அவை எரியாததால் பாம்பன் மேம்பாலமே இருள்மயமாக காட்சியளிக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ராமேசுவரம் ஒரு புண்ணிய தலம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பாம்பன் ரோடு பாலத்தில் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து இருப்பதாலும் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பதாலும் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து ெகாண்டு கடலுக்குள் பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. ஏனெனில் இரவு நேரங்களில் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பாலம் கடலுக்கு மேல் கட்டப்பட்டு இருப்பது மின்விளக்கு எரியாததால் தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் இந்த பாலத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் எரிய வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்