கனககிரியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியார் காடு பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பட்டீஸ்வரி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணியில் குறித்து கேட்டறிந்தார். இந்த கிராம சபை கூட்டத்தில் சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி, மகுடஞ்சாவடி பீடிஓ (கி.ஊ) முத்துசாமி மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 10,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 65.6 சதவிதமாக இருப்பதை உயர்த்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்கள் மற்றும் அதன் பயனாளிகள் பட்டியல், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலக அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

காந்திஜெயந்தி: சங்ககிரி கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்

சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை அரிமா சங்க கட்டிட வளாகத்தில் கோடை அரிமா சங்கம்,ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காந்திஜெயந்தியையொட்டி சங்ககிரி கோட்டை அரிமா சங்க கட்டிட வளாகத்தில் கோட்டை அரிமா சங்கம், ஈரோடு ரத்த சுப்ரீம் ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமினை அரிமா சங்கங்களின் மண்டலத்தலைவர் சண்முகம் தொடங்கி  வைத்தார்.இம்முகாமில் இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். அப்போது
முன்னாள் தலைவர்கள் வழக்கறிஞர்கள்  என்.ஆர்.கே மாணிக்கசுந்தர், ரமேஷ், சக்திவேல், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் சண்முகம், துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராமசாமி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

சங்ககிரி செய்தியாளர்
முத்து

ஆத்தூர் உழவர் சந்தை

1. தக்காளி - ரூ.20-26
2. உருளைக் கிழங்கு ஆக்ரா- ரூ.38-40 ஊட்டி-ரூ.40-45
3. சின்ன வெங்காயம் - ரூ.30-36
4. பெரிய வெங்காயம் - ரூ.22-30
5. பச்சை மிளகாய்- ரூ.42-45
6. கத்தரி-ரூ.25-30
7. வெண்டைக்காய் - ரூ.18-20
8. முருங்கை காய் - ரூ.60-70
9. பீர்க்கங்காய் -ரூ.45-50
10. சுரக்காய்- ரூ. 10-12-15
11. புடலங்காய் - ரூ.22-25
12. பாகற்காய் - ரூ.48-50
13. தேங்காய் - ரூ. 25-30
14. முள்ளங்கி - ரூ. 18-20
15. பீன்ஸ் - ரூ.40-45
16. அவரை - ரூ.40-50                                                                                                                                                                                                                                                                                                                                    17. a.ஊட்டி கேரட் 🥕 - ரூ.80-90
     b.கருமந்துரை கேரட் 🥕- ரூ.45-50                                                                                                                                                                                                                                                                                                     

18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - ரூ.70
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-45
21.கீரைகள் - ரூ.20-24
22.பப்பாளி - ரூ.15- 20
23.கொய்யா-ரூ.30-35-40
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

தம்மம்பட்டி உழவர் சந்தை

1. தக்காளி - ரூ30-35
2. உருளைக் கிழங்கு - ரூ40-45
3. சின்ன வெங்காயம் - ரூ30-35
4. பெரிய வெங்காயம் - ரூ25-30
5. பச்சை மிளகாய்- ரூ40-45
6. கத்தரி -ரூ32-36
7. வெண்டைக்காய் - ரூ22-25
8. முருங்கைகாய் - ரூ55-60
9. பீர்க்கங்காய் -ரூ48-50
10. சுரக்காய்- ரூ15-16
11. புடலங்காய் - ரூ28-30
12. பாகற்காய் - ரூ48-50
13. தேங்காய் - ரூ28-30
14. முள்ளங்கி - ரூ24-26
15. பீன்ஸ் - ரூ58-60
16. அவரை - ரூ50-60
17. கேரட் - ரூ90-96
18. வெற்றிலை - இல்லை
19.மாங்காய்-ரூ70-80
20.வாழைப்பழம் - ரூ35-40
21.கீரைகள் - ரூ.18-20
22.பப்பாளி - ரூ.18-20
23.கொய்யா-ரூ30-35
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

அஸ்தம்பட்டி உழவர் சந்தை

1. தக்காளி ரூ 26 - 38
2. உருளைக் கிழங்கு - ரூ 36 - 50
3. சின்ன வெங்காயம் - ரூ 40 -44
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ 48 -46
6. கத்தரி ரூ 30 -36
7. வெண்டைக்காய் ரூ 28-26
8. முருங்கை காய் -ரூ 70-80
9. பீர்க்கங்காய் -ரூ 46-50
10. சுரக்காய்- ரூ 18-20
11. புடலங்காய் - ரூ 32-34
12. பாகற்காய் - ரூ 46-50
13. தேங்காய் - ரூ 25-30
14. முள்ளங்கி - ரூ 24-26
15. பீன்ஸ் - ரூ 70-66
16. அவரை - ரூ 34-46
17. கேரட் - ரூ 90-80
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய்- ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 26-46-50
21.கீரைகள் - ரூ 20-24
22.பப்பாளி - ரூ 22-25
23.கொய்யா-ரூ 30
24. மாதுளை - இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சப்போட்டா -இல்லை

இளம்பிள்ளை உழவர் சந்தை 

1) . தக்காளி ரூ. 30 - 40
2) . உருளைக் கிழங்கு - ரூ. 36 - 40
3) . சின்ன வெங்காயம் - ரூ. 40 -46
4) . பெரிய வெங்காயம் - ரூ. 26-30
5) . பச்சை மிளகாய் ரூ. 44 - 46
6) . கத்தரி ரூ. 30 -40
7) . வெண்டைக்காய் ரூ. 24-28
8) . முருங்கை காய் -ரூ. 70-60
9) . பீர்க்கங்காய் -ரூ. 46-50
10) . சுரக்காய்- ரூ. 18-20
11) . புடலங்காய் - ரூ. 32-35
12) . பாகற்காய் - ரூ. 46-50
13) . தேங்காய் - ரூ. 25-30
14) . முள்ளங்கி - ரூ. 24-28
15) . பீன்ஸ் - ரூ. 70-66
16) . அவரை - ரூ. 34-45
17) . கேரட் - ரூ. 90-80
18) . வாழைப்பழம் - ரூ. 30-45
19) .கீரைகள் - ரூ. 20-24
220) .பப்பாளி - ரூ. 22-25
21) .கொய்யா-ரூ. 30

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் அமைந்துள்ள விஜய விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு ஐந்தாவது நாளாக நவராத்திரி கொலு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் துர்க்கை அம்மன் ரூபாய் நோட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேட்டூர், அக். 1. மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 11,690 கன அடியாக அதிகரிப்பு.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,690 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் மட்டம் 118.75 அடியாகவும் நீர் இருப்பு 91.49 டிஎம்சியாகவும் உள்ளது.