சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே

சாக்கடை கால்வாயில் வாலிபர் சடலம்.

திறந்து இருக்கும் சாக்கடை கால்வாய்களை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தி சிலை உள்ளது.

இங்கு உள்ள சாக்கடை கால்வாயில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இவர் யார் என தெரிய வில்லை.

இவர் மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா ?அல்லது தாக்கப்பட்டு சாக்கடை கால்வாயில் தள்ளப்பட்டாரா? என
சேலம்டவுன் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்கள் மூடப்படாமல் உள்ளது .

இதனால் பலரும் சாக்கடை வாய்க்காலில் தவறிவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க உடனே சாக்கடை கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் மூட வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்

 

சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

சரியாக பாடம் எடுக்காததால் மாவட்ட கல்வித் துறை அதிகாரி நடவடிக்கை.


சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சரியாக பாடம் எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அருகே உள்ளது எருமாபாளையம் .

இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

எருமாபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் இங்கு வந்து படிக்கின்றனர் .
தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் செந்தில்குமார் சரியாக பாடம் எடுக்கவில்லை என புகார் வந்தது.

பெற்றோர் பலரும்தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து கணித ஆசிரியர் செந்தில்குமார் மீது புகார் தெரிவித்திருந்தனர்.

இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் கணித ஆசிரியர் செந்தில்குமாரை அழைத்து விசாரித்தார் .

இதில் கோபப்பட்ட செந்தில்குமார் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

பிறகு அவர் தலைமை ஆசிரியரை மிரட்டவும் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ,
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனிடம் புகார் செய்தார் .

இதனை விசாரித்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் பள்ளிக்கு வந்து நேரில் விசாரித்தார்.

இதில் கணித ஆசிரியர் செந்தில்குமார் சரியாக பாடம் எடுக்காதது தெரியவந்தது.

இதனையடுத்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி முருகன், கணித ஆசிரியர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

 

சேலம் மணியனூர் கொலைவழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை.

கடந்த 08.05.2020ல் சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அபிஷேக் மாறன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

திருமணத்தை மீறிய உறவால் நடந்த இந்த சம்பவத்தில் அருள்குமார்(வயது 25), பிரபாகரன்(வயது25) ஆகியோ கைது செய்யப்பட்டனர்.

இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆயிரம் அபராதம் விதிப்பு.

சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு வழங்கினார்.

 

ஆர்.எஸ் . எஸ், பிரமுகர் இல்லத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்.

சென்னையிலிருந்து வந்த
நவீன இயங்கும் தடைய அறிவியல் கூட வேனில் வைத்து ஆய்வு

கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

சேலத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது .
இந்த இடத்திற்கு சென்னையில் இருந்து வந்த நவீன இயங்கும் தடைய அறிவியல் கூட வேனில் வைத்து தடைய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆர். எஸ் .எஸ் .பிரமுகர் ராஜன் இல்லத்தில் நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது .

இது தொடர்பாக சேலம் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து
எஸ். டி. பி. ஐயின் சேலம் மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் சேலம் 34வது வார்டு எஸ். டி. பி. ஐயின் கிளைத் தலைவர்
காதர் உசேன்
ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பிறகு இவர்கள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்து நிலையில் சென்னையில் இருந்து நவீன இயங்கும் தடைய அறிவியல் கூட வேன் சேலத்தில் நடக்கும் விசாரணைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வேனில் தடய அறிவியல் தொடர்பான ஆய்வு செய்யலாம். கைரேகைகளையும் பதவி செய்து ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்கான லேப் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேன் சேலத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட ராஜன் இல்லத்திற்கு சென்றது .

பின்னர் ராஜன் கதவில் பதிவு இருந்த கைரேகைகள் மற்றும் சிதறி கிடந்த மண்ணெண்ணெய் பாட்டிலின் உடைந்த பாகங்களை எடுத்து ஆய்வு செய்தனர்.

இதன்பிறகு ராஜன் இல்லம் முன்பு இருந்து எடுத்த மண்எண்ணை பாட்டிலில் பதிந்துள்ள கைரேகைகளையும், ராஜன் வீட்டு கதவில் பதிந்திருந்த கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்தனர்.

இந்த ஆய்வில் தடைய அறிவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டனர்.

மேட்டூர் அனல் மின் நிலையம் நுழைவாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில்
மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்,
மின் வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையில் வேலை வழங்குவதை கைவிட வேண்டும், மின்வாரிய ஆணை 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ,அரசு ஆணை 100 தொடர்பாக தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதேபோல்
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.