ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் விலையில்லா கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசியதாவது:- அரசுபள்ளியில் பிளஸ்-2 படித்து மருத்துவ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேவையான, தேர்வுக்கான எளிய பயிற்சி முறையை போதியளவு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை பையூஸ் ஆகாஷ் நிறுவனம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் பயிற்சி வழங்கும் வகையில் மத்திய அரசு 117 முன்னேற விளையும் மாவட்டங்களை தேர்வு செய்து இத்தகைய பயிற்சிகளை வழங்குகிறது.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம் .

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு .


தெற்கு ரயில்வே
பொது மேலாளர்
பி.ஜி. மல்லையா சேலம் ரெயில்வே கோட்டத்தில் நடக்கும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதுபோல சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் பல்வேறு பயணிகள் நடந்து வருகிறது .

இந்த நிலையில் இந்த பணிகளை இன்று காலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா ஆய்வு செய்தார்.

சென்னையில் இருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளரும், மற்ற அதிகாரிகளும் தனி ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.

பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் எளிதாக டிக்கட் எடுக்கும் எந்திரத்தை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் அவர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் நடந்து சென்று ரயில் நிலையத்தில் நடந்த வரும் பணிகள் குறித்தும் ,வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து ஆய்வு செய்வதை அறிந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் இரா.அருள் கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.

இந்த ஆய்வில் சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் , தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோனேரிப்பட்டி நீர்மின் கதவனை தண்ணீர் வெளியேறும் பகுதி பாறை திட்டுக்களாக காட்சியளிக்கிறது.


காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மலை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக குறைந்தது.இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளைக்காராக காணப்பட்ட கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை பகுதியில் காவிரி ஆறு திட்டுகளாக காட்சியளிக்கிறது குறைந்த அளவில் உள்ள தண்ணீரில் கிராமப்புற பகுதி மக்கள் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்து வருகின்றனர் அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை ஜிலேபி ஒரு கிலோ ரூ150 வீதம் விற்பனை செய்து வருகின்றனர் நீர்மின் கதவணையில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் நுங்கு நுரையுமாக செல்லும் பகுதியில் பாலத்தின் வழியாக வாகனத்திலும் நடந்து செல்வோர் பாலத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

சங்ககிரி வட்டார அளவிலான தொடர் ஓட்டம்போட்டியில் தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி  நடைபெற்றது.

இதில் இளையோர் பிரிவில் ஓட்டப் போட்டியில் தேவூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்தனர், மேலும் நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும்,200 மீட்டர்,400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்தனர்,இதேபோல் மேல் மூத்தோர் பிரிவில் 1500 மீட்டர் போட்டியில் தேவூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்தனர்,200 மீட்டர், 800 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும்,100 மீட்டர்,200 மீட்டர்,400 மீட்டர் 4×100 மீட்டர்,4×400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன்,தேவூர் பேரூராட்சி தலைவர் தங்கவேல்,துணை தலைவர் தனராஜ், ஆகியோர் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரேமா, பள்ளி தலைமை ஆசிரியரகள் பொருப்பு சசிகுமார், மாதேஸ்வரன், மூத்த தமிழாசிரியர் தங்கவேல், உடற்கல்வி ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மாரியப்பன் அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மஞ்சள் விலை நிலவரம்
21.09.2022

1.PERUNDURAI REGULATED MARKET


Lots : 78
Arrivals : 736
Sales : 373 Bags

2.Erode Variety
( Turmeric )
Finger: 5350 - 7344
Bulb : 4775 - 6730

3.ERODE REGULATED MARKET


Lots : 174
Arrivals : 1875
Sales : 627 Bags
Finger: 5660 - 7899
Bulb : 5311 - 6686


4.Erode Society

Arrival :720
Sales : 615
Lots : 77

New
Finger : 5799 - 7700
Bulb : 5419 - 6910


5.Gobi society

Arrivals: 110
Sale's : 110
Lot's : 14
Finger : 5299 - 6859
Gatta : 5169 - 6599