- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 50
(தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.)
பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்
Pradhan Mantri Krishi Sinchayee Yojana ( PMKSY )
இத்திட்டத்தின் கீழ்,
பம்புசெட் அமைக்க,
மோட்டார்,
பைப்லைன்,
ஆழ்துளை கிணறு
மற்றும் நீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளையும் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
*திட்டத்திற்கான நோக்கம் :
● பாசனநீர் ஆதாரம் உறுதிசெய்தல்
● ஒவ்வொரு வயலுக்கும் நீரினை கொண்டு செல்லுதல் மற்றும் சாகுபடி நிலங்களை விரிவுபடுத்துதல்
● நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்
● விவசாயிகள், விவசாயமல்லாத பணிகளுக்கு இடம் பெயர்வதை குறைத்தல்
● தரிசு நிலங்களை குறைத்தல்
● வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல்
● சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத்தினை அதிகரித்தல்,
*திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் :
● நில நீர் ஆய்வு செய்தல்
● குழாய் கிணறு /ஆழ்துளை கிணறு அமைத்தல்
● சூரிய சக்தி / மின் சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுத்தல்
● மின் இணைப்பு வழங்குதல்
● நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல்,
*திட்டத்திற்கான தகுதிகள் :
● திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகள்
● பாதுகாப்பான குறுவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்
● ஒரு ஆண்டின் சராசரி மழை அளவு 750 மி.மீ. அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்
● நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலை 60% த்திற்கு குறைவாக இருக்க வேண்டும்
● திட்டப்பகுதி எவ்வித நீர் ஆதாரத்தினாலும் பாசனவசதி பெறாத இடமாக இருக்க வேண்டும்,
*திட்டம் பெறும் முறை :
● சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை,
( அல்லது )
தோட்டக்கலை துறை அலுவலகம்,
திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் :
ஆதார் நகல்,
குடும்ப அட்டை நகல்,
சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்,
சிட்டா, அடங்கள்,
நில வரைபடம்,
மற்றும் இரண்டு புகைப்படம்.
அருகிலுள்ள தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.தகவல் பனமரத்துப்பட்டி உழவர்மன்றம்🌾🌾🌾🌾🙏
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 47
சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இன்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் .
இதனையடுத்து சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளிலும் இன்று காலை காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சேலம் மாநகராட்சி பகுதியில்
28 இடங்களில் இன்று காலை காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது.
சேலம் மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சேலம் மா நகராட்சி ஆணையாளர் ஆணையாளர் கிறிஷ்துராஜ், துணை மேயர் சாரதா தேவிமற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்றனர்.
முகாமில் மாணவிகளுக்கு காய்ச்சல் தடுப்பு ஊசியும் போடப்பட்டது.
இது போல் சேலம் மாவட்டம் முழுவதும் 240இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் இன்று காலை நடந்தது.
இந்த முகாம்களில் திரளான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 46
தலைவாசல் அருகே பரிதாபம்
ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி
பெற்றோர் கூறுவது உண்மையா? போலீசார் விசாரணை
தலைவாசல் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியில் தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டது .இது உண்மையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது கெங்கவல்லி.
இங்குள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்.
கூலித் தொழிலாளி,
இவரது மனைவி புஷ்பலதா.
இவர்களுக்கு
திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது .
ஆனால் ஐந்து வருடமாக புஷ்பலதாவிற்கு குழந்தை இல்லை .
இதன் பின்னர் தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது அந்தப் பெண் குழந்தைக்கு வயது ஒன்றரை வயது ஆகிறது .
குழந்தையின் பெயர் ருத்ரா ஆகும்.
இன்று பிற்பகலில் வீட்டு அருகே குழந்தை ருத்ரா விளையாடிக் கொண்டிருந்தாள்.
குழந்தையின் தாயாரும், குழந்தையின் பாட்டியும் அருகே உள்ள தோட்டம் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது குழந்தை ருத்ரா வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டதாகவும் ,
உடனே குழந்தையை கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என்று கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர் .
பின்னர் இது குறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .
இதனையடுத்து கெங்கவல்லி போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததா ?
அல்லது குழந்தையின் சாவிற்குவேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 45
இன்று அதிகாலை வெள்ளைக்கற்கள் கடத்தியவன் கைது.
சேலம் அருகே உள்ள கருப்பூர் குளத்தோடை என்ற பகுதியிலிருந்து டிப்பர் லாரியில் வெள்ளைக்கற்கள் கடத்திச் சென்ற ஓமலூரை சேர்ந்த பெருமாள் (வயது 44) கைது செய்யப்பட்டார்
சுமார் 7 டன் எடையுள்ள ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரியை பறிமுதல் செய்த கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 46
சாயல்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ..ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பா.ஜ.க. கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன். மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், இளைஞரணி துணைத் தலைவர் மதன்குமார், பட்டியல் அணி செயலாளர் ராஜவேல், கடலாடி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜசேகர், இளைஞரணி தலைவர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்