- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 130
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை.மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் (பொறுப்பு) மருத்துவர் தனபாலுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சேலம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்ட மூலம் 8 அரசு மருத்துவமனைகள் ,
63 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்யப்பட்டு வருகிறது.
இதில் சிறப்பாக செயல்பட்ட சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,ஆத்தூர் அரசு மருத்துவமனை,சேலம் தரன் தனியார் மருத்துவமனை ஆகியவற்க்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சேலம் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து சேலம் மாவட்ட சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீ ன் (பொறுப்பு )மருத்துவர் தனபாலுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 லட்சத்து31 ஆயிரத்து 487 குடும்பம் பதிவு செய்யப்பட்டு காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 59
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் அதிமுகவினர பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் .
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது சரியென தீர்ப்பு வழங்கி இருந்தது .
இதையடுத்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை முன்னிட்டும், புரட்டாசி மாதத்தை ஒட்டியும் இன்று (வெள்ளி) மாலை சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , மாநகர் மாவட்ட செயலாளருமான வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அன்னதானம் வழங்கினர்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 64
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழக முழுதும் உள்ள அனைத்து வைணவ கோவில்களில் இன்று பக்தர்கள் ஏராளமானூர் பெருமாளை வழிபட்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டை அழகர்நாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனி ஆன இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று அழகிரிநாதர் சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 64
கோ ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்….
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் பட்டு மற்றும் ஜவுளி விற்பனை நிலையங்களில் இன்று முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது. சேலம் கடை வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸின் தங்கம் பட்டு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்.இங்கு பல வண்ணங்களில் மென்பட்டு, பருத்திச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ஜவுளி ரகங்கள், உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.85 கோடிக்கு ஜவுளி விற்பனை நடைபெற்ற நிலையில் நடப்பு ஆண்டு 7.30 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 71
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேலத்தில் பலரிடம் 2.83 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.....
சேலம், சென்னை , திருப்பூர், பவானி என பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....
படித்த இளைஞர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வந்தவர் தான் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார். சேலத்தைச் சேர்ந்த இவர், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில் பணியாற்றி வருவதாகவும் கூறி பல்வேறு இடங்களில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் 70 ரூபாய் லட்சம் மோசடி செய்ததாக புகார். இந்த விவகாரத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமாரை , போரூர் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் அரவிந்த்குமார் (30) என்பவர் , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் இடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனது தந்தை பொன்னுசாமி மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மண்டி தரகரான அன்னதானப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் பழக்கமானார்.
பின்னர் நடராஜன் தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை அறிமுகப்படுத்தி அவர் மூலம் நண்பர்கள் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி , நானும் எனது உறவினர்கள் சிலரிடமிருந்தும் அரசு வேலைக்காக கடந்த 2015 -16ஆம் ஆண்டு காலகட்டத்தில் 2 கோடி 83 லட்ச ரூபாய் பணத்தை பல தவணைகளாக சசிகுமாரிடம் வழங்கினோம். ஆனால் சசிக்குமார் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார் .
இந்த நிலையில் அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரிய வந்தது. இதனால் அவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். பணத்தை திருப்பி தராமல் சசிகுமார் , அவருடைய மனைவியை சாந்தலட்சுமி , அரிசி மண்டி தரகர் நடராஜன், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் அர்களது கூட்டாளிகளான முகமது உஸ்மான் , மணி கோபி ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார். இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், போலி ஐஏஎஸ் அதிகாரி என கூறிக் கொண்டு வலம் வந்த சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதனை அடுத்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கூட்டு சதி, மோசடி , கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சசிகுமாரை கைது செய்ய முயற்சித்த போது அவர் ஏற்கனவே சென்னையில் தனியார் மருத்துவர் ஒருவரிடம் 70 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர் இந்த நிலையில் போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு துணையாக இருந்த அவருடைய மனைவி, நடராஜன் உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டில் கருமந்துறையை சேர்ந்த தேவராஜ் என்பவரின் எஸ்டேட்டை அபகரிக்க முயற்சித்துள்ளார். தொடர்பாக அவர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தலைமுறைவான சசிகுமார் முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அவர் கொடுத்த வி ஏ ஓ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் போலியாக தயாரித்து வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கருமந்துறை போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எடுத்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கருமந்துறை போலீசார் மனு தாக்கல் செய்து நேற்று முன்தினம் சென்னை புழல் சிறையில் இருந்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமாரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு போலி சசிக்குமார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், போலியான ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்டு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.