- Details
- Written by Ramya
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 104
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்த முத்துவயல் கிராம பஞ்சாயத்து சின்ன இதம்பாடலில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகம் மூலம் நெல் பொட்டாஷ் விதை கடினப் படுத்துதல் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. ஒரு ஏக்கருக்கு தேவையான நெல், 300 கிராம் பொட்டாஷ் உரத்தை 30 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் 30 கிலோ விதையை நன்கு கலக்கி 13-14 மணி நேரம் ஊறவைத்து, பின் நீரினை வடித்து 24 மணி நேரம் நிழலில் காய வைத்து பின் விதைக்க வேண்டும். பொட்டாஷ் நேர்த்தி செய்த விதைகளை உடனே விதைக்க இயலாத சூழ்நிலையில் ஒரு மாத காலம் வரை வைத்திருந்து விதைக்கலாம்.
இந்த விதையை விதைப்பதால் பயிர் முளைத்து ஒரு மாத காலம் வரை மழையில்லா விட்டாலும் பயிரினை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம் என சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா விதை நேர்த்தி செய்து இடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் மற்றும் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு விவரம் பற்றி கூறினார்.
ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்
- Details
- Written by Ramya
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 103
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் நோக்கில் சமூக நலத்துறை சார்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. இதனை சமூக பாதுகாப்பு திட்டம் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். 2019 கொரோனா பாதிப்பிற்கு பிறகு குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்
- Details
- Written by Ramya
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 118
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த தர்மர் இருந்து வந்தார். அவர் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி காலியான நிலையில் இருந்தது.அதனை ஒட்டி இன்று ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக தலைமையின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது வார்டு திமுக சின்னத்தில் சண்முகப்பிரியா போட்டியிட்டார். மூன்றாவது வார்டு திமுக வேட்பாளராக நாகஜோதி போட்டியிட்டார்.அதில் திமுக தலைமை அறிவித்த சண்முகப்பிரியா எட்டு வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாகஜோதி 5 வாக்குகள் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதில் ஒரு வாக்கு செல்லாதவை.
இந்த வெற்றியை அடுத்து அதிமுக வசம் இருந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசமானது.
ராமநாதபுரம் மாவட்டம்-ரூபன் செய்தியாளர்
- Details
- Written by Ramya
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 98
பாம்பன் தரவை தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை கொலாஸ்டிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. 5 பிரிவாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் வணிகவியல் துறையில் படிக்கும் 3-வது ஆண்டு மாணவி ஷிமா வெற்றி பெற்றார். இதேபோல் 5 பிரிவாக நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த கார்த்திகா மற்றும் ருக் ஷானந்தா ஆகிய மாணவிகள் வெற்றி பெற்றனர். சதுரங்கம் மற்றும் கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் சோபி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் அருட் சகோதரி எமல்டாராணி, கல்லூரி நிர்வாக பொறுப்பாளர் அருட்சகோதரி ரூபி, துணை பேராசிரியர் ஸ்வீட்லீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம்-ரூபன் செய்தியாளர் -
- Details
- Written by Ramya
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 105
தமிழகம் முழுவதும் சுமார் 11 இடங்களில் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் மதரசா பள்ளிகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் பரகத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாலையில் இருந்து சோதனை மேற்கொண்டு வந்தனர்.இந்த சோதனையானது ஹைதராபாத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை ஆகிய புகாரை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வந்தது.
இதனையொட்டி உள்ளூர் போலீசார், மற்றும் கூடுதல் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸார்கள் குவிக்கப்பட்டனர். பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளை விசாரணை நடத்தும் அமைப்பு தான் இந்த NIA தேசிய புலனாய்வு முகமை இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது.பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை அறிய அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கமானதாக இருக்கிறது.மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வாலிநோக்கம் பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வீட்டில் சோதனை நடத்தியபோது பொது மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பரகத்துல்லா வீட்டில் சோதனை செய்து விசாரணைக்காக பரக்கத்துல்லாவை NIA அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் NIA அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் வாலிநோக்கம் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். அதானல் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.
ரூபன் செய்தியாளர் ராமநாதபுரம் மாவட்டம்