சேலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்
23/9/2022

1.மல்லி =320
2.முல்லை=240
3.ஜாதிமல்லி=260
4.காக்கட்டான்=160
5.கலர் காக்கட்டான்=120
6.அரளி =100
7.வெள்ளைஅரளி=100
8.மஞ்சள் அரளி =100
9.செவ்வரளி =120
10.ஐ.செவ்வரளி. =120
11.நந்தியாவட்டம் =60
12.சி.நந்திவட்டம் =60
13.சம்மங்கி =80
14.சாதா சம்மங்கி =80


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையம் முற்றுகை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தோரமங்கலம். இந்த ஊராட்சியில் உள்ள பொடையன் தெருவில் இரண்டு அரசு மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மது கடைகள் தோரமங்கலம் கிராமத்தில் திறக்க கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனாலும் டாஸ்மார்க் கடை திறப்பதற்கான கட்டிடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று காலை ஆண்களும் பெண்களும் சுமார் 100 பேர் ஜலகண்டபுரம் காவல் நிலையம் அருகே கூடினார்கள் சிறிது நேரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் உதவி ஆய்வாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மதுக்கடையை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் தொடர்ந்து மதுக்கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டார் போராட்டத்தை தீவிர படுத்தவும் என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி குழந்தைகள் செல்லும் பாதையில் மதுக்கடை அமைத்தால் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் பெண்கள் தெரிவித்தனர்.

காவல் நிலையம் முற்றுகை காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ஜூலை 16-ம்தேதி நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது.

கடந்த 70 நாட்களாக தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் 120 கன அடியாக நீடித்து வந்தது.

கடந்த சில தினங்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து போனது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வந்தது. இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,456 கன அடியாக குறைந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900கன அடி வீதமும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 70 நாட்களுக்குப் பிறகு 120 கன அடியிலிருந்து 119.95 கன அடியாக குறைந்தது.

அணையின் நீர் இருப்பு 93.39 டி.எம்.சியா கஇருந்தது. நடப்பு நீர் பாசன ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை மேட்டூர் அணைக்கு 461 டி.எம்.சி தண்ணீர் மழையின் காரணமாக வந்துள்ளது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மட்டும் 123 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ,
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான சண்முகராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடக்கிறது .

இது தவிர பல்வேறு பணிகளும் நடந்து வருகிறது ,

இந்த நிலையில் இந்த பணிகளை பார்வையிட சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான சண்முகராஜா இன்று வந்து பார்வையிட்டார் .


முதலில் அவர் சேலம் மணக்காடு பகுதியில் நடந்து வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகளை பார்வையிட்டார்.

காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? போதிய அளவு உணவு செய்யப்படுகிறதா என்றும் கேட்டு அறிந்தார்.

இதன் பிறகு அவர் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு நடந்து வரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் நிலவாரப்பட்டி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட குறித்து பார்வையிட்டு கேட்டு அறிந்தார். இதன் பிறகு சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி ஏரி பகுதிக்கு அவர் சென்று அங்கு மழைநீர் தேங்கியுள்ளதா என்று பார்வையிட்டார் .

இது தவிர பனமரத்துப்பட்டி ஏரியில் வேறு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ,
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 மேட்டூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திருட்டு. மேட்டூர் அருகே உள்ள கருங்கரடு சுண்ணாம்பு குட்டையை சேர்ந்தவர் மதன்ராஜ் (29). மேட்டூர் சதுரங்காடியில் செல்போன்கள் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான சொகுசு காரை நிறுத்திவிட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது சொகுசு காரை காணவில்லை.    இரண்டு நாட்களாக தேடிப் பார்த்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்தும் கார் கிடைக்காததால் இன்று மாலை மேட்டூர் போலீசில் மதன்ராஜ் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருட்டு போன சொகுசு காரின் மதிப்பு ரூ.3லட்சம் இருக்கும்.

ஜினித் குமார், செய்தியாளர்.