வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்ககிரி  கிளையில் பருத்தி டெண்டர் நடைபெற்றது , இதில் சுற்று பகுதியிலிருந்து 20 விவசாயிகள் மொத்தம் 100 மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர், இதற்கு வியாபாரிகள் 3 நபர்கள் மூலம் ஏலம் நடைபெற்று மொத்தபட்டுவாடா ₹ 3 00 000 (இலட்சம்) இதில் DCH. அதிக பட்சம் ₹ 10300 குறைந்தபட்சம் ₹ 8599 RCH அதிக பட்சம் ₹ 10292 குறைந்த பட்சம் ₹ 9099 கொட்டு அதிக பட்சம் ₹ 4039 குறைந்தபட்சம் ₹ 3069 என்று விலை நிர்ணயம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழப்பாடி:

மேட்டூர் இரும்பு குழாய் உடைந்து 40 அடி உயரம் தண்ணீர் பீய்ச்சு அடிப்பதால் போக்குவரத்திற்கு சிரமம்:

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் வாழப்பாடி கருமந்துறை நெடுஞ்சாலை அருகே அகத்தியன் என்பவரின் வீட்டருகே நெடுஞ்சாலையில் வாழப்பாடியிலிருந்து குறிச்சி, கோணஞ் செட்டியூர், ரங்கனூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மேட்டூர் குடிநீர் இரும்பு பைப் குழாய் உடைந்து 40 அடி உயரம் தண்ணீர் பீச்சி அடித்து வருகிறது. சுமார் 6.30 மணியிலிருந்து 8 மணி வரை வெளியேறி வருவதால் அருகிலுள்ள இரண்டு வீடுகளில் தண்ணீர் அடித்துள்ளது,

இதனால் வாழப்பாடி கருமந்துறை சாலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூரில் வருவாய் துறையில் பணி புரியும் பணியாளர்கள் அலுவலர்களின் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் இன்று துவக்கி வைத்தார்.  மேட்டூர் வருவாய் கோட்டத்தில் உள்ள மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாக்களில் பணி புரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது.  மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் முகாமினை துவக்கி வைத்தார். கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளவரசி ஆகியோர் தலைமையில் 100 மருத்துவ பணியாளர்கள் இம்முகாமில் பணியாற்றி வருகின்றனர். சித்த மருத்துவம், பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை, தோல் மருத்துவம், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.  காசநோய் தொழுநோய் எய்ட்ஸ் பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கும் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது.  மக்களை தேடி மருத்துவத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 மேட்டூர்-22.09.22 மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மலை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000 கன அடியாக சரிந்தது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.

சேலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்
22/9/2022

1.மல்லி =320
2.முல்லை=240
3.ஜாதிமல்லி=260
4.காக்கட்டான்=120
5.கலர் காக்கட்டான்=100
6.அரளி =100
7.வெள்ளைஅரளி=100
8.மஞ்சள் அரளி =100
9.செவ்வரளி =120
10.ஐ.செவ்வரளி. =120
11.நந்தியாவட்டம் =40
12.சி.நந்திவட்டம் =40
13.சம்மங்கி =40
14.சாதா சம்மங்கி =40