வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சோமம்பட்டியைச் சேர்ந்த லிங்கேஸ்வரி(14) இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த ஹரிணி (14) ஆகிய இரண்டு மாணவிகளும் சாணி பவுடர்சாப்பிட்டுள்ளனர்,மாணவிகள் சட்டையில் காரை உள்ள நிலையில் வகுப்பறையில் இருந்ததை பார்த்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை விசாரித்துள்ளனர் அப்பொழுது சாணி பவுடர் சாப்பிட்டது தெரியவந்ததின் அடிப்படையில் உடனே வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா தலைமையில் வாழப்பாடி போலீசார் விசாரணையில் பெற்றோர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் இந்த மாணவி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இந்த மாணவி தனது உறவினரான அத்தை வீட்டில் தங்கி பயின்று வரும் சூழ்நிலையில் ஹரிணி பள்ளியில் சோகமாக இருந்த நிலையில் அதன் தோழியான லிங்கேஸ்வரி ஆகிய இருவரும் சோகத்தை பகிர்ந்துள்ளனர், அப்போது ஹரிணியின் சகோதரர் அடிக்கடி இந்த பெண்ணை பிடித்து அடித்து வருவதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியு கேட்ட லிங்கேஸ்வரியும் எங்கள் வீட்டிலும் இதே போல் நடந்து வருகிறது என்று இருவரும் உயிர் வாழ விருப்பமில்லை உடனே ஏதாவது செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆ.ப.செந்தில்குமார்,செய்தியாளர்வாழப்பாடி.

மஞ்சள் விலை நிலவரம்

20.09.2022

1.PERUNDURAI REGULATED MARKET

Lots : 41
Arrivals : 350
Sales : 327 Bags
Erode Variety ( Turmeric )
Finger: *5480_7474
Bulb : *4880_6699

2.ERODE REGULATED MARKET

Lots : 169
Arrivals : 2581
Sales : 827 Bags
Finger: *5799_7909
Bulb : *5461_6852

3.Erode Society

Arrival :522
Sales : 522
Lots : 54

New
Finger : 5869_8069
Bulb : 5555_6859

4.Gobi society

Arrivals:48
Sale's :48
Lot's : 15
Finger : 5899 - 7899
Gatta : 4866 - 6959

இளம்பிள்ளை அரசு பெண்கள் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் சேலம் எம்பி பார்த்திபன் வழங்கி மாணவிகள் மத்தியில் புகழாரம்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வீரபாண்டி ஒன்றிய அட்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர், இளம்பிள்ளை பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜ கணேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிர்மலா செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பிடிஏ கழக நிர்வாகிகள், ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை எம்பி பார்த்திபன் வழங்கி மாணவிகள் மத்தியில் புகழாரம் . தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் அரசு துறையிலும் தனியார் துறையிலும் உயர் பதவிகளை வைத்திருக்கின்றனர் என்றும் இப்பள்ளியில் பயிலும் மாணவிகளாகிய நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாக பதவி வகித்து பொதுமக்களுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத்தர நீங்கள் நன்கு கல்வி பயில வேண்டுமென தெரிவித்தார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த 12 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 12 மீனவர்களும் இலங்கை திரிகோண மலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம் 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 274 மனுக்கள் பெற்றார். மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனு தாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்