மேட்டூர் அணை நீர்மட்டம் செப். 10. மேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 65,000 கனஅடி.  காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத்தணிந்து வருவதால் நேற்று பிற்பகலில்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு   வினாடிக்கு 65,000 கன அடியாக சரிந்தது. இன்று 2-வது நாளாக நீர் வரத்து 65,000கன அடியாக நீடிக்கிறது. 

 

அணையில் இருந்து   வினாடிக்கு 65,000 கானா அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 42,000கன அடி நீரும் திறக்கப்பட்டு. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  இன்று காலைமேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

 

 

மேட்டூர், செப். 10. மேட்டூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டம் இம்மாதம்16-ம்தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற தலைவர் பொறியாளர் என்.தண்டபாணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூர் மின் பகிர்மான வட்ட மக்கள் குறைதீர்க்கும் குழும கூட்டம் இம்மாதம் 16ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

 

மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தைச் சார்ந்த அனைத்து மின் நுகர்வோர்களும் தொடர்புடைய மின்வாரிய -அதிகாரிகளால் தீர்க்கப்படாத குறைகளை களைய முறையிடலாம்.

 

இக்கூட்டத்தில் மின்திருட்டு, மின்வாரிய பொருள்களை களவாடுதல், மின்சார மீட்டர்களை சேதப்படுத்துதல், மின்வாரிய பணிகளை உள்நோக்கத்தோடு தடுத்தல், தெருவிளக்குகளை சேதப்படுத்துதல், மின்சார சட்ட விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை கட்டாயம் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த்,ரித்து வர்மா நடிக்கும் படம் 'கணம்'.தமிழ் தெலுங்கில் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்தப் படத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை அமலா தமிழில் ரீ என்ட்ரி ஆகிறார்.1991 ம் ஆண்டு 'கற்பூர முல்லை' படத்திற்கு பிறகு 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார் அமலா.தெலுங்கில் இப்படம் 'ஒகே ஒக ஜீவிதம்' எனும் பெயரில் வெளியாக உள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் பலரையும் ரசிக்க வைக்கும் அம்மாவை இழந்தவர்களுக்கு தாலாட்டாக மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் பாடலாக அமையும் என்று பட குழுவினர் கூறியுள்ளனர். அம்மா மகன் சென்டிமென்ட்,டைம் டிராவல் போன்ற கதை கரு கொண்டது.இந்த படத்தை ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாவை வெள்ளி திரையில் பார்க்க தமிழக மக்கள் அனைவரும் மிக ஆர்வமாக உள்ளனர்.

 

 

மேட்டூர், செப். 10. மேட்டூர் நகரம், மேச்சேரி, மேட்டூர்.ஆர்.எஸ், பூமனூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் இம்மாதம் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை இத்தனை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக மேட்டூர் செயற்பொறியாளர் மு.சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

 

மேட்டூர் நகரம், மேச்சேரி, மேட்டூர்.ஆர்.எஸ் மற்றும் பூமனூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. இதனால் செப்டம்பர் 13ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

 

மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவபட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளிப்பட்டி, ஆண்டிகரை, பொட்டனேரி, கூனாண்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரகல்லூர், எம் காளிப்பட்டி, மேட்டூர் ஆர் எஸ், கருமலை கூடல், புதுச்சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக் கரை, கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய் நகர், தங்கமாபுரி பட்டினம், கருப்பு ரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர், பூமனூர், செட்டியூர், பாலமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கும் பொருட்டும் , வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும் ஒரு வாக்காளர்களின் விவரம் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருஇரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கவும் பொருட்டும் 04/09/2022 (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இனிப்பதற்கான சிறப்பு முகாம்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1370 வாக்குச்சாவடி மையங்களும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெற உள்ளது இச்சிறப்பு முகாமின் போது வாக்காளர்கள் தன்னார்வ அடிப்படையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இனைய வழி அல்லது படிவம் 6B பூர்த்தி செய்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனவே இச்சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) திரு . ஆ.ம. காமாட்சி கணேசன் கேட்டுக்கொள்கிறார்.