இளம்பிள்ளை பாஜக சார்பில் பாரதப் பிரதமர் பிறந்தநாள் விழா- தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 137
இளம்பிள்ளை பாஜக சார்பில் பாரதப் பிரதமர் பிறந்தநாள் விழா- தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இளம்பிள்ளை நகர பாஜ சார்பில் பேரூராட்சியில் பணிபுரியும் 40 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் இளம்பிள்ளை நகர தலைவர் நிர்மலாவீரிசெட்டி முன்னிலை வகித்தார். மேலும், விழாவில் நிர்வாகிகள் முரளிதரன், ஆறுமுகம், ஜெயராமன், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
p.செல்வராஜ் செய்தியாளர், இளம்பிள்ளை
- Details
- Written by Muthusamy
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 183
சங்ககிரி அருகே புதியதாக அமைக்கப்படவுள்ள 4 வழிச்சலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி 15 நாட்களாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குழந்தைகள் அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தம் 214 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் அருந்ததியர், ஆதிதிராவிடர் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த 5-ம் தேதியிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அப்பகுதியில் ஓமலூர் முதல் சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதி பொதுமக்களும் பள்ளி மாணவ,மாணவிகளும் அவ்வழியாக பள்ளிக்கு செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தர கோரி தொடர்ந்து 15 வது நாளாக பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், தற்போது தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சத்தில். இருந்து வருகிறோம் என்றும், இது குறித்து உயர் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
p.செல்வராஜ் செய்தியாளர், இளம்பிள்ளை.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 49
சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை சத்துணவில் முட்டை சாப்பிட்ட 13 மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந்தனர். இவர்கள் அவசர ஊர்தி மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 49
மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவிகள் வாந்தி மயக்கம். சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மேட்டூர் அடுத்த கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 670 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நிலையில் இன்று 274 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வகுப்பறைக்கு சென்று அமர்ந்தனர். அப்போது சிறிது நேரத்திலேயே மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மயக்கம் அடைந்த மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். சோர்வடைந்து காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.