- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 71
மேட்டூர், செப். 15. பண்ணவாடி பரிசல் துறை மூடல்... பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அவதி.
சேலம் மாவட்டம் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் நாகமரை பரிசல் துறைக்கு காவிரியை கடக்க படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பரிசல் துறை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விடப்படும். கடந்த முறை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பரிசல் துறை ஏலம் விடப்பட்டது. குத்தகை காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் நடப்பு ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஏலம் விடப்பட வேண்டும். குத்தகை காலம் முடிந்தும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பொது ஏலம் விடவில்லை.குத்தகை காலம் முடிவடைந்ததால் பரிசல் துறை மூடப்படுவதாகவும் யாரும் காவிரியில் பரிசல் இயக்கக் கூடாது என்றும் மீறி இயக்குவோர் மீது போலீஸ் நடவடிக்கை பாயும் என்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
முன் அறிவிப்பு ஏதும் இன்றியும் மாற்று ஏற்பாடுகள் செய்யாமலும் திடீரென இன்று படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியரும் அலுவலகம் செல்வோரும் சந்தைக்கு விளைபொருட்களைகொண்டு செல்லும் விவசாயிகளும் வியாபாரிகளும் பரிசல்துறைக்கு வந்து பரிசல் இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- Details
- Written by A.P.Senthil kumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 73
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள சிஎஸ்ஐ நகர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் பேராலயத்தில் கடந்த 11-ம் தேதி ஞாயிறு மாலை 2 - மணி முதல் 4 வரை பேராலய உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று அதில் 14 நபர்கள் போட்டியிட்டனர், இதில் கலைச்செல்வி , ரமேஷ் என்ற இருவரும் சமமான வாக்குகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் முத்தம்பட்டி ஊராட்சி ஐந்தாவது வார்டு உறுப்பினராக உள்ள ஜான்சி பரிமாலா என்ற பெண்ணிற்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் காயம் அடைந்த பகுதியில் 6 தையல் போட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அந்த பெண் வாழப்பாடி காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா மேற்பபார்வையில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் (வயது 42) என்ற லாரி டிரைவரை கைது செய்துள்ளனர், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 72
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
இப்பள்ளியில் 286 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சிவகுமார் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
தலைமை ஆசிரியர் இடமாறுதலை ரத்து செய்ய கோரி கடந்த இரண்டு வாரங்களாக பெற்றோர்களும் மாணவ மாணவியரும் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட அளவிலான கல்வித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் போலீஸ் வீடு வீடாக சென்று குழந்தைகளை அழைத்தது 23 பேர் மட்டுமே பள்ளிக்கு வந்தனர்.
நேற்று மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பெற்றோர்களுடனும் கிராம மக்களுடனும் பேச்சு நடத்தி சமாதானப் படுத்தினார். மாறுதல் செய்யப்பட்ட தலைமையாசிரியர் நான்கு மாதங்களுக்குப் பிறகு இதே பள்ளியில் பணியாற்றுவார் என்று உறுதி அளித்தார். எம்எல்ஏவின் சமாதானத்தையடுத்து இன்று காலை பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள்.
- Details
- Written by A.P.Senthil kumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 73
சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் உள்ள அவரது படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து அங்குள்ள கொடி கம்பத்திற்கு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர் இதில் ஏற்காடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வாழப்பாடி ஆத்ம குழு தலைவர் சக்கரவர்த்தி வாழப்பாடி நகர செயலாளர் பி சி செல்வம்,பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராமன், பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணியன்,சிங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி மாது முன்னாள் கவுன்சிலர் கமல் ராஜா, மாவட்ட பிரதிநிதி வீரேந்திர துரை, குறிச்சி பெரியசாமி,பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ரஞ்சித்குமார், ஆட்டோ சுரேஷ், ராணி மாதேஸ்வரன், பிடிஏ தலைவர் கலைஞர் புகழ், வார்டு செயலாளர்கள் கோபி நாத், மதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வாழப்பாடி நகர திமுக சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வாழப்பாடி நகர திமுக செயலாளர் பி. சி செல்வம் அவர்கள் தலைமையில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் கொடியேற்றி மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதனை அடுத்து வாழப்பாடி ரயில்வே கேட் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் கமல் ராஜா தலைமையில் பழனியாபுரம் மாது அவர்கள் கொடி கம்பத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்,ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் வாழப்பாடி நகர திமுக செயலாளர் பி சி செல்வம் அவர்கள் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் இதேபோல் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழப்பாடி உள்பட சுற்று பகுதிகளில் 114 இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
- Details
- Written by A.P.Senthil kumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 77
சேலம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் நேற்று கோவிந்தன் தலைமையில் சசிகலாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பால்வளத்துறை (உளுந்தூர்பேட்டை) முன்னாள் அமைச்சர் ஆனந்த் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காரில் அதிமுக கொடியுடன் வந்த சசிகலா காரில் இருந்தவாறு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். சசிகலாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டன