(18-09-2022)-மேட்டூரில் சி.எஸ்.ஐ, நல் மேய்ப்பர் ஆலயத்தின் பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி போதை விழிப்பு இன்று பிரச்சார இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மேட்டூர் எம்.எல்.ஏ, சதாசிவம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


மேட்டூரில் சி.எஸ்.ஐ ,நல் மேய்ப்பர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 75-வது ஆண்டையொட்டி பவளவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நுழைவாயிலில் ஆயர் டேனியல்சதீஷ் நெல்சன் ஜெபம் செய்து கொடியினை ஏற்றி வைத்தான். அதனைத் தொடர்ந்து போதை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மேட்டூர் எம்.எல்.ஏ, சதாசிவம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை பாதுகாப்பு அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். பேரணியானது சிஎஸ்ஐ நல் மேய்ப்பர் ஆலயத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் செயலாளர் பாரிசிங், பொருளாளர் வின்சென்ட் ஜேசுதாஸ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்தனர்.

இனிய காலை வணக்கம்🙏🏽
--🥕🥕🥕🥕🥕🥕🥕
இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ ) தாதகாப்பட்டி உழவர் சந்தை
நாள் : 19-09-2022
----------------🍒------------------
1. தக்காளி ரூ 28-38
2. உருளைக் கிழங்கு ஆக்ரா/ ஊட்டி- ரூ -38-44-56
3. சின்ன வெங்காயம் - ரூ 26-30
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ-34-36
6. கத்தரி ரூ36-40
7. வெண்டைக்காய் -ரூ:20-20
8. முருங்கை காய் -ரூ50-55
9. பீர்க்கங்காய் -ரூ 46-48
10. சுரக்காய்- ரூ 20
11. புடலங்காய் - ரூ32-34
12. பாகற்காய் - ரூ 45-48
13. தேங்காய் - ரூ 26-30
14. முள்ளங்கி - ரூ 34-36
15. பீன்ஸ் - ரூ 90-100
16. அவரை - ரூ 60-64
17. கேரட் - ரூ 100-105
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - 70-80
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 20- 50
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
21.கீரைகள் - ரூ20-24
22.பப்பாளி - ரூ 20-24
23.கொய்யா-ரூ30-35
24. மாதுளை -100
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை
---------------🍒☘🍒-----------------

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்தது. இதனால் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உபரி நீர் போக்கி மூடப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது  25 நாட்களுக்குப் பிறகு உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக சரிவு.  காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடியாக சரிந்துள்ளது.  இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.



சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ளது அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 670 மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியின் துப்புரவு பணிக்கு இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.  மாணவியர் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வகுப்பறை வரை வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூய்மை செய்யப்படாத கழிவறையில் மாணவியர் செல்ல முடியாமல் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை தலைமை ஆசிரியரிடமும் கல்வித் துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.