- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 58
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் சிமெண்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அந்த வார்டு கவுன்சிலர் மோகன்தாசிடம் முறையிட்டனர். மேலும் 7-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில்தெருவில் சாலை பழுதடைந்து கிடப்பது குறித்தும், பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்ட னர். இதையடுத்து கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் உடனடியாக சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்ல 3 சிமெண்டு குழாய்களை ரோட்டின் குறுக்கே பதித்து நடைபாதையை சீரமைத்தனர்.
ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 59
சேலத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் அரசகுரு(13). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் அரசகுரு, கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். பெற்றோர் பலமுறை சமாதானம் கூறியும் அரசுகுரு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திங்கள் கிழமை முதல் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று பெற்றோர் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் சோகத்தில் இருந்து வந்த மாணவன் அரச குரு , நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த பெற்றோர் மகனின் உடலைக் கண்டு கதறி அழுதனர் . இதுகுறித்து தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் அரசகுரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை இருந்து வந்ததா? அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
காட்டெருமை முட்டி இரண்டு பேர் படுகாயம்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள எடப்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் மற்றும் வேலு ஆகியோர் இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் வாழப்பாடி அருகே உள்ள தெக்கிடிப்பட்டி என்ற காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர் .
அப்போது இரண்டு காட்டெருமைகள் மாய கண்ணனையும், வேலுவையும் முட்டி தாக்கியது .
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
வேலு வாழப்பாடி அரசு மருத்துவமனையிலும், மாயக்கண்ணன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 55
காமராஜர் திராவிட மாடல் தான் தமிழகத்திற்கு தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நிலைப்பாடு என்பதே திமுகவின் திராவிட மாடல் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கண்டனம் தெரிவித்து இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், மின் கட்டண உயர்வுக்கு சாதாரண ஏழை எளிய மக்களா காரணம்? என்று கேள்வி எழுப்பினார். ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நிலக்கரி மற்றும் தளவாட பொருட்கள் வாங்குவதில் ஊழல் ஆகியவற்றைத் தவிர்த்து இருந்தால் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்று கூறிய அவர் ஏற்கனவே கொரோனா பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது மீண்டு வரும் மக்களுக்கு திமுக மேலும் சுமையை அதிகரிக்கும் விதமாக சொத்து வரி மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நிலைப்பாடு என்பதே திமுகவின் திராவிட மாடல் என்று விமர்சித்த ஜி கே வாசன், காமராஜர் திராவிட மாடல்தான் தற்பொழுது தமிழகத்திற்கு தேவை என்றார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை ஏமாளிகளாக்கிவிட்டதாகவும் கூறிய ஜி.கே.வாசன், திமுகவின் எந்த நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளாக மாறும் என்றும் தெரிவித்தார்.
- Details
- Written by K.RAJASEKARAN
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 56
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு இணைப்பு
புதியதாக போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உருவாக்கம்.
வடக்கு, மேற்கு மண்டலத்திற்கு சேலம் தலைமையிடம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும்,
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவையும் இணைத்து மேம்படுத்தி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல்துறையில் அமலாக்கப் பிரிவில்,
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையில் செயல்பட்டு வந்தது.
இதன் கீழ் சென்னை மற்றும் மாவட்டங்களில் மத்திய நுண்ணறிவு பிரிவு (சி.ஐ.யு.) செயல்பட்டு வந்தது.
அதேபோல தமிழக காவல்துறையின் குற்றப் பிரிவில்,போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு செயல்பட்டு வந்தது.
இந்தப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்தப் பிரிவு மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என 15 இடங்களில் செயல்பட்டு வந்தது.
இத்துடன் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவும், குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டையும், புழக்கத்தையும் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுடன் (என்.ஐ.பி.) இணைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்பேரில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும்,போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவையும் இணைத்து மேம்படுத்தி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாகப் பிரிவாக மறுசீரமைக்கப்படும்.
இதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.
இதனிடையே புதியாக சீரமைக்கப்பட்ட போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையின் கீழ் செயல்படும்.
மேலும் ஒரு ஐ.ஜி. மற்றும் ஐந்து எஸ்.பி.க்களை கொண்டு செயல்படும்.
சென்னை-1, சென்னை-2 (சென்னை நகரம், ஆவடி, தாம்பரம்),
சேலம்-3 (வடக்கு மற்றும் மேற்கு மண்டலம். கோவை, திருப்பூர் மற்றும் சேலம் நகரங்கள்), மதுரை-4 (தெற்கு மற்றும் மத்திய மண்டலம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி நகரங்கள்), சென்னை-5 (அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு, மாநிலம் முழுவதும் செயல்படும் வகையில் எஸ்.பி.க்கள் நியமிக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.